மகாராஷ்டிரத்தில் புதிதாக 15 ஆயிரம் பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,077 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,077 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 57,46,892 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 184 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 33 ஆயிரம் பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 53,95,370 பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.66 சதவிகிதமாக உள்ளது.
தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 16.39 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 93.88 சதவிகிதமாக உள்ளது.
இன்றைய நிலவரப்படி 2,53,367 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.