இந்தியா

மாட்டுத் தொழுவமாக மாறிய ஆரம்ப சுகாதார நிலையம்

பிகாரில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

DIN

பிகாரில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிகார் மாநிலம் கதிஹார் பகுதியின் சமேலி கிராமத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக செயல்படாததால், காலப்போக்கில் மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது.

மேலும், சுற்றுப்புறப் பகுதியிலுள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்களும், செயல்படாமல் பாழடைந்த கட்டடங்களாக மாறி புதர்மண்டிக் கிடக்கின்றன.

இது தொடர்பாக பேசிய அப்பகுதி மக்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொறுத்தவரை பிகாரின் பல பகுதிகளில் இதுபோன்ற நிலையே உள்ளது. 

இங்கு  மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை கடிதம் மூலம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்

SCROLL FOR NEXT