'இது மாநில அரசுகளுடன் மோதும் நேரமில்லை'
மாநில அரசுகளுடன் மோதல்போக்கைக் கடைப்பிடிக்கும் நேரமல்ல இது என்று கூறியிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆனால், கரோனா பேரிடருக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
புது தில்லி: மாநில அரசுகளுடன் மோதல்போக்கைக் கடைப்பிடிக்கும் நேரமல்ல இது என்று கூறியிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆனால், கரோனா பேரிடருக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பேரிடர் மற்றும் யாஸ் புயல் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளரை திரும்பப் பெற மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறித்து கேஜரிவால் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தலைமைச் செயலாளர், தொடர்ந்து அப்பணியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் செய்தியை தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்து, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.