இந்தியா

காங். ஆர்ப்பாட்டத்தின்போது நுழைந்த பிரபல நடிகரின் கார் கண்ணாடி உடைப்பு

DIN

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த பகுதிக்குள் நுழைந்த பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜின் கார் கண்ணாடி திங்கள்கிழமை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கொச்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-47-இல் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அந்த வழியே வந்த ஜோஜு ஜார்ஜ், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜிஜோ ஜார்ஜின் கார் பின்புற கண்ணாடியை காங்கிரஸ் கட்சியினர் உடைத்துள்ளனர்.

இதுகுறித்து எர்ணாகுளம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முஹம்மது சியாஸ் கூறுகையில், “காவல்துறையின் அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு குடிபோதையில் வந்த ஜோஜு ஜார்ஜ் பிரச்னையில் ஈடுபட்டார். மேலும், கட்சியின் பெண் தொண்டரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். அவரின் காருக்குள் மதுப் பாட்டில்கள் இருந்ததை நாங்கள் கண்டோம். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.”

காங்கிரஸ் கட்சியினரின் புகாரையடுத்து, ஜோஜு ஜார்ஜ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும், ஜார்ஜின் கார் கண்ணாடியை உடைத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT