இந்தியாவில் இன்று மேலும் 12,514 பேருக்கு கரோனா
இந்தியாவில் இன்று மேலும் 12,514 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று மேலும் 12,514 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12,514 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,85,814 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க- தமிழகத்தில் 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 251 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,58,437 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 12,718 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,36,68,560 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,58,817 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை 106.31 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 8,81,379 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 60.92 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.