இந்தியா

தில்லியில் டெங்கு அதிகரிப்பு: அதிகாரிகளுடன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை

தில்லியில் டெங்கு பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். 

DIN

தில்லியில் டெங்கு பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். 

தில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அந்தந்த மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் தில்லியில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அமைச்சர், டெங்குவைக் கண்டறிவதற்கான மிக முக்கியமான நடவடிக்கை பரிசோதனையே ஆகும். அதன்பின்னர் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக சிகிச்சை அளிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய, மாநிலங்களுக்கு இடையே பயனுள்ள ஒருங்கிணைப்பு தேவை. 

சில மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. சில மருத்துவமனைகளில் படுக்கைகள் தொடர்ந்து காலியாக உள்ளன. இந்த இடைவெளி நீக்கப்பட அதிகாரிகள் தகவல்தொடர்பை உருவாக்க வேண்டும். 

கரோனாவுக்கு ஏற்படுத்தியதைப் போல, டெங்குவுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு படுக்கைகளை மீண்டும் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மக்களும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருந்து வீட்டையும் சுற்றியுள்ள பகுதிகளையும் தண்ணீர், குப்பைகள் சேராதாவாறு சுத்தமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகாரிகளும் தண்ணீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து மருந்து தெளிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT