முகப்பு
இந்தியா

தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊதிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும்: மத்திய நிதியமைச்சர் உறுதி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்துக்கான நிலுவைத் தொகையை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் மூலம் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:30 AM
பகிர்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்துக்கான நிலுவைத் தொகையை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் மூலம் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை உறுதியளித்தார்.
 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றிய கிராமப்புற தொழிலாளர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி வரை வழங்க வேண்டிய ரூ. 1,172.12 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
 இந்தக் கடித்தை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செவ்வாய்க்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்து அளித்தார்.
 பின்னர், செய்தியாளர்களிடம் டி.ஆர். பாலு கூறியதாவது:
 இந்தத் திட்ட நிதி மத்திய நிதி அமைச்சகத்திடம் இருந்து, மத்திய ஊரக வளர்ச்சித் துறைக்கு வழங்கப்பட்டு விட்டதாக நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை தொடர்பு கொண்டு நிதியை விடுவிக்க வலியுறுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
 மேலும், இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் தொகை காலதாமதமானால், மாநில அரசு நிதியிலிருந்து ஊதியத்தை வழங்கவும், பின்னர் இந்தத் தொகையை மத்திய அரசு விடுவிக்கும் எனவும் நிதியமைச்சர் கூறியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments