இந்தியா

கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

DIN

கேரளத்தின் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் துபை மற்றும் தோஹாவிலிருந்து கடத்திவரப்பட்ட 1.18 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நேற்று  (நவ.2) துபையிலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஜமீலா என்கிறப் பயணியைப் பரிசோதனை செய்தபோது தலைமுடியில் மறைத்து 556 கிராம் தங்கத்தைக் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஏர் இந்தியா விமானம் மூலம் தோஹாவிலிருந்து கோழிக்கோடு வந்த பயணியைப் பரிசோதனை செய்தபோது அவரிடமிருந்து 576 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.52 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருகிறது.

முன்னதாக கடந்த அக்-29 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கொச்சி விமான நிலையத்திற்கு ரூ.2.40 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT