இந்தியா

தில்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்த 143 பேர் கைது

DIN

தில்லியில் தடையை மீறு பட்டாசு வெடித்ததாக 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக பசுமை பட்டாசுகள் உள்ளிட்ட எந்த விதமான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 

எனினும் தீபாவளி பண்டிகை தினத்தன்று நகரின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்நிலையில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக பட்டாசுகள் விற்பனை செய்ததாக 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 19702489 கிலோ பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகைக்கு பின்னான தரவுகளின் அடிப்படையில் தில்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அபாயகரமான அளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT