இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்வு

DIN

உத்தரப்பிரதேசத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.

கடந்த அக். 25 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பணியாற்றி வந்த இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பின் அடுத்தடுத்து அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ததில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அம்மாநிலத்தில் டெங்கு பாதிப்புகள் ஒருபுறம் அதிகரித்துவரும் நிலையில் தற்போது ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் கான்பூர் பகுதியில் புதிதாக 30க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 45 ஆண்களும், 21 பெண்களும் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT