ம.பி.யில் சம்பவம்: துண்டு கொடுக்க தாமதமானதால் மனைவியைக் கொன்றவர் கைது 
இந்தியா

ம.பி.யில் சம்பவம்: துண்டு கொடுக்க தாமதமானதால் மனைவியைக் கொன்றவர் கைது

மத்தியப் பிரதேச மாநிலத்தில், குளித்துவிட்டு வந்தவருக்கு உடம்பு துடைக்க துண்டு கொடுக்க தாமதமானதால், ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN


பாலாகத்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், குளித்துவிட்டு வந்தவருக்கு உடம்பு துடைக்க துண்டு கொடுக்க தாமதமானதால், ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை மாலை ஹிராப்பூர் கிராமத்தில் 50 வயது நிரம்பிய ராஜ்குமார் பாஹே, குளித்துவிட்டு வந்ததும், துண்டு கேட்டுள்ளார். 45 வயது புஷ்பா பாய், தான் பாத்திரங்கள் தேய்த்துக் கொண்டிருப்பதாகவும், முடித்துவிட்டு எடுத்து வருகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். துண்டு வர தாமதமானதால், ஆத்திரமடைந்த ராஜ்குமார், மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே புஷ்பா பலியானார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த 23 வயது மகள், தந்தை, தாயை அடிப்பதை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அவளையும் கொன்று விடுவேன் என்று ராஜ்குமார் மிரட்டியுள்ளார். 

இது குறித்து குடும்பத்தினர் காவல்நிலையத்தில் தகவல் அளித்ததன்பேரில், புஷ்பாவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மாலை ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

தலைமை காவலரை தாக்கியவா் கைது

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

உத்தமபாளையத்தில் பலத்த மழை!

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...? ஈ.ஆர்.ஈஸ்வரன்

SCROLL FOR NEXT