கோப்புப்படம் 
இந்தியா

நாட்டு பிரிவினைக்கு இவங்கதான் காரணம்: ஜின்னா சர்ச்சைக்கு மத்தியில் ஒவைசி குற்றச்சாட்டு

இந்தியாவின் முதல் பிரதமராக முகமது அலி ஜின்னா வந்திருந்தால் நாடு பிரிவினையை சந்தித்திருக்காது என சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓபி ராஜ்பார் கருத்து தெரிவித்திருந்தார்.

DIN

இந்தியாவின் முதல் பிரதமராக முகமது அலி ஜின்னா வந்திருந்தால் நாடு பிரிவினையை சந்தித்திருக்காது என சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓபி ராஜ்பார் புதன்கிழமை கருத்து தெரிவித்திருந்தார். இந்த வரலாற்று நிகழ்வுக்கு ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையான நிலையில், நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களுமே காரணம் என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "(வரலாறு) படிக்காத ஆர்எஸ்எஸ்காரர்கள், பாஜகவினர், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். பிரிவினை இஸ்லாமியர்களால் நடக்கவில்லை. 

ஜின்னாவால் நடந்தது. அந்த நேரத்தில், நவாப்கள் அல்லது பட்டம் பெற்றவர்கள் போன்ற செல்வாக்கு உள்ள இஸ்லாமியர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். பிரிவினைக்கு அன்றைய காங்கிரஸும் அதன் தலைவர்களுமே காரணம்" என்றார்.

காஸ்கஞ்ச் சம்பவம் குறித்து பேசிய ஓவைசி, "காஸ்கஞ்ச் சம்பவம் உங்கள் முன் உள்ளது. அல்தாப்பின் தந்தையிடம், காவல் நிலையத்தில் தனது மகன் 2.5 அடி உயரமுள்ள தண்ணீர் குழாயில் தனது ஹூடியில் உள்ள சரத்தின் மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. காஸ்கஞ்ச் போலீசாரே அவரைக் கொன்றனர். உங்களுக்கு விசாரணை செய்யத் தெரியாது. ஆனால், கொலை செய்யத் தெரியும்" என்றார்.

2022 உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்காக சமாஜ்வாதி கட்சியும் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்ததுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருத்தணி: சரவணப் பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம்!

திருவள்ளூர்: ரூ.1.05 கோடியில் 95,000 மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டம்

கணவரை காா் ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: மனைவி கைது

தொழில்நுட்பப் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,737 போ் பங்கேற்பு

வாணியம்பாடி: மாவட்ட பாஜக அலுவலகத்தில் இல.கணேசனுக்கு அஞ்சலி

SCROLL FOR NEXT