‘கோமியம், சாணத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்’: ம.பி. முதல்வர்
மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தை முறையாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மாட்டின் கோமியம்மற்றும் சாணத்தை முறையாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிர் பிரிவு மாநாடு போபாலில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தை பயன்படுத்தி மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “சரியான முறையில் அவற்றைக் கையாண்டால் பொருளாதாரம் மேம்படும் என சிவராஜ் சிங் செளகான் பேசினார். "பசுவின் சாணம் மற்றும் சிறுநீரை பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் பல பொருட்களை தயாரிக்கலாம் எனவும் மத்தியப் பிரதேச அரசு தகன மேடைகளில் மரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்” என சிவராஜ் சிங் செளகான் தெரிவித்தார்.
இதையும் படிக்க | தமிழகத்தில் இன்று புதிதாக 809 பேருக்கு கரோனா
மேலும் கால்நடைகளுக்கு விரைவான மருத்துவ சேவையை உறுதி செய்ய சிறப்பு ஆம்புலன்ஸ் தொடங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். மாநில முதல்வரின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.