இந்தியா

மணிப்பூர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் கண்டனம்

DIN

மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உள்பட 6 பேர் பலியான நிலையில் இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மியான்மர் நாட்டுடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சூரசந்த்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல், அவரது மனைவி மற்றும் மகன் மற்றும் 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

பயங்கவாதிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மணிப்பூரில் அசாம் ரைஃபிள்ஸ் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நமது வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. அனைத்து வடிவங்களிலும் வெளிப்படக்கூடிய பயங்கரவாத செயல்களை வேரறுக்க வேண்டும் என்று இந்த சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT