இந்தியா

காற்று மாசு: தில்லி பொதுப் போக்குவரத்தில் கூடுதல் தளர்வுகள்?

DIN

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்க கோரி பேரிடர் மேலாண் ஆணையத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில நாள்களாக தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவிலான வாகனங்கள் இயக்கம், தொழிற்சாலைகள், பயிர்க்கழிவுகள் எரிப்பு காரணமாக கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக தில்லியில் பேருந்து, மெட்ரோ ரயில்களில் பயணிகல் நின்று பயணம் செய்ய தில்லி பேரிடர் மேலாண் ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்கக் கோரி அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், தனியார் பேருந்துகளை ஒப்பந்தம் செய்து பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கவும் அந்த கடிதத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT