சம்ரித்தி சகுனியா, சுவா்ண ஜா 
இந்தியா

‘பத்திரிகையாளர்கள் பெயரில் வன்முறையை தூண்ட முயற்சி’: திரிபுரா பாஜக அமைச்சர்

பத்திரிகையாளர்கள் எனும் பெயரில் திரிபுராவில் வன்முறையைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டதால் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக மாநில பாஜக அமைச்சர் தெரிவித்துள்ளது சர்ச்சையக் கிளப்பியுள்ளது. 

DIN

பத்திரிகையாளர்கள் எனும் பெயரில் திரிபுராவில் வன்முறையைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டதால் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக மாநில பாஜக அமைச்சர் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக திரிபுராவில் வகுப்புவாதம் தொடர்பாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் ஆத்திரமூட்டும் பதிவுகளை வெளியிட்டதாக சம்ரித்தி சகுனியா, சுவா்ண ஜா ஆகிய இரு பெண் ஊடகவியலாளா்களை திரிபுரா காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்ற அனுமதியுடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் மாநில அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையாகியுள்ளது.

திங்கள்கிழமை பேசிய திரிபுரா அமைச்சர் சுஷாந்தா செளத்ரி, “கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எனும் பெயரில் அடையாளம் காணப்பட்ட இருவரும் மாநிலத்தில் வன்முறையைத் தூண்டும் நோக்கில்  வந்த கட்சியின் பிரதிநிதியாக வந்துள்ளனர். மக்களை அரசுக்கு எதிராக தூண்டுவதே அவர்களின் பணி. அவர்கள் உண்மையில் பத்திரிகையாளர்கள் தானா என்கிற சந்தேகம் எழுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் கட்சியின் சார்பாக நடத்தப்படும் நிறுவனத்தில் பணியாற்றும் இவர்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு விடக்கூடாது எனவும் சுஷாந்தா செளத்ரி கூறியுள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT