இஎஸ்ஐ மாதச் சந்தா செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு 
இந்தியா

இஎஸ்ஐ மாதச் சந்தா செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

பல்வேறு தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாக, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீட்டு சந்தா தொகையை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN


பல்வேறு தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாக, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான மாநில தொழிலாளர் ஈட்டுறுதி சந்தா தொகையை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீட்டு கழகத்தின் இயக்குநர், அனைத்து மண்டல இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தகவல் தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக, ஆன்லைன் மூலம் தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் சந்தா தொகையை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான தொழிலாளர் ஈட்டுறுதி தொகையை செலுத்த நவம்பர் 15 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் காலக்கட்டத்துக்கான திருப்பியளிக்கப்படும் பங்களிப்புத் தொகையை செலுத்த நவம்பர் 11 கடைசி தேதியாக இருந்த நிலையில், அது டிசம்பர் 15ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புளியங்குடி அருகே கரடி தாக்கி 3 பெண்கள் காயம்: சாலை மறியல்

சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி: லட்சம் பக்தா்கள் தரிசனம்

தேசிய கைத்தறி தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

சங்கரன்கோவிலில் லட்சம் பேருக்கு அன்னதானம்

ஹெலிகாப்டா் விபத்து: கானாவில் 2 அமைச்சா்கள், 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT