இந்தியா

பெட்ரோல் ரூ.4, டீசல் ரூ.5: ராஜஸ்தான் அரசு வரி குறைப்பு

DIN

பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலையை ரூ.5 குறைக்க ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்வா் அசோக் கெலாட் தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5, டீசல் ரூ.10 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடா்ந்து, பாஜக ஆளும் மாநில அரசுகள் வாட் வரியை குறைத்து அறிவித்தன. தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT