இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்-17 ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் அதில் பயணித்த அனைவரும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கிழக்கு அருணாச்சல பிரதேசத்தின் பகுதியில் இரண்டு விமானிகளுடன் 3 பேர் கொண்ட குழுவினர் விமானப் பராமரிப்பு பணியை மேற்கொள்ளப் பயணித்தனர்.
அப்போது தரையிரங்கும் போது ஹெலிகாப்டர் திடீரென விபத்திற்குள்ளானது.
இருப்பினும் அதில் பயணித்தவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் விபத்திற்கான காரணமும் விரைவில் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.