இந்தியா

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் பெங்களூருவில் கைது

DIN

ஐ.எஸ். பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்  தேசிய புலனாய்வு முகமை போலீசார் தேடி வந்தனர். 

இந்நிலையில், தகவலின்படி பெங்களூரு சென்ற தேசிய புலனாய்வு முகமை போலீசார், ஜோயிப் மன்னா என்பவரை கைது செய்தனர். 

இவர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்காக இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து துருக்கி வழியாக பல இளைஞர்களை சிரியாவுக்கு அனுப்பியதாகவும் தகவல் உள்ளது. 

முன்னதாக, ஐ.எஸ்.அமைப்பிற்கு நிதி திரட்டியதாக பெங்களூருவில் அரிசி வியாபாரி இர்பான் நசீர், தமிழகத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் அகமது அப்துல் காதர், மருத்துவர் முகமது துக்கீர் மெஹபூப் ஆகியோரை என்ஐஏ கைது செய்தது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது என்.ஐ.ஏ. கட்டுப்பாட்டில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT