கோப்புப்படம் 
இந்தியா

‘அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1,000 வழங்கப்படும்’: பஞ்சாபில் கேஜரிவால் பிரசாரம்

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மோகாவில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய கேஜரிவால்,

நாங்கள் பஞ்சாபில் ஆட்சி அமைத்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் தலா ரூ. 1,000 வழங்குவோம். ஒரு குடும்பத்தில் 3 பெண்கள் இருந்தால் அனைவருக்கும் ரூ. 1,000 வழங்கப்படும்.

இந்த திட்டமானது உலகிலேயே பெண்களுக்கு மிகப் பெரிய அதிகாரமளிக்கும் திட்டமாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சக்கர வாகனம் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

கமுதியிலிருந்து கிராமங்களுக்குப் புதிய பேருந்து இயக்கம்

ஜூனியா் உலக ஹாக்கி கோப்பை கிருஷ்ணகிரியில் அறிமுகம்

4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

மாவட்ட ஆண்கள் கபடி போட்டியில் குட்டப்பட்டி அணி சாம்பியன்

SCROLL FOR NEXT