கௌதம் கம்பீர் 
இந்தியா

முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தனக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

DIN

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தனக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜகவின் மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் காஷ்மீர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் கம்பீரின் தனிப்பட்ட இமெயில் கணக்கிற்கு காஷ்மீர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

மேலும் புகார் குறித்து விசாரணை நடைபெறும் என்றும் கம்பீர் வீட்டிற்குப் காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் துணை ஆணையர் சுவேதா சவுகான் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு கௌதம் கம்பீருக்கு சர்வதேச எண்ணிலிருந்து கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் காந்தார படக்குழுவினர் - புகைப்படங்கள்

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கையில் 2 வீரர்கள் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

அமித் ஷாவை எப்போதும் நம்பாதீர்கள்: மோடியை எச்சரித்த மமதா!

இரவில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT