இந்தியா

நாட்டில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது தொற்று பாதிப்பு: 10,949 பேர் மீண்டனர்

DIN

புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,283 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 9,283

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,45,35,763​​​​​​​.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 10,949.
இதுவரை குணமடைந்தோர்: 3,39,57,689.​​​​​​​

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.339​​​​​​​% என்றளவில் அதிகரித்துள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 437. உயிரிழந்தோர் விகிதம் 1.35 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,66,584.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,11,481. இது கடந்த 537 நாள்களில் இல்லாத அளவுக்குக் குறைவு. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.32 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கரோனா தடுப்பூசி:   நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,18,44,23,573 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 76,58,203 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 63,47,74,225 பரிசோதனைகளும், செவ்வாய்கிழமை மட்டும் 11,57,697 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT