இந்தியா

மும்பை: முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 78.55 கோடி அபராதம் வசூல்

DIN

முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து இதுவரை ரூ. 78.55 கோடி அபராதம் வசூலித்ததாக மும்பை மாநகராட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களிடம் மாநில அரசால் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மும்பை மாநகராட்சிப் பகுதிக்குள் வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், நவம்பர் 24ஆம் தேதி வரை மும்பையில் முகக்கவசம் அணியாமல் இருந்த 39,08,347 பேரிடமிருந்து ரூ. 78,55,70,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT