ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தைச் சேர்ந்த பிளைவுட் மற்றும் அலுமினிய வியாபாரி அருண் ஓஜா (37). இவரது செல்லிடப்பேசிக்கு கடந்த சனிக்கிழமை ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.8 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து அவர் விசாரித்ததில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள எச்டிஎஃப்சி வங்கியிலிருந்து இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஆனால், யார், எதற்காக இந்தத் தொகையை அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை.
உடனடியாக தனது வாடிக்கையாளர்கள் பலருக்கும் அவர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, பணம் எதையாவது தனது வங்கிக் கணக்கில் செலுத்தினீர்களா என்று கேட்டுள்ளார். எங்குமே அவருக்கு பதில் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, எச்டிஎஃப்சி வங்கியிலிருந்தே அழைப்பு வந்துள்ளது. அதில், தவறுதலாக வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இதை அறிந்து கொண்ட ஓஜா, உடனடியாக, யாருக்கு அந்தத் தொகை சென்று சேர வேண்டுமோ, அவரது வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு, பணத்தை பரிவர்த்தனை செய்துள்ளார். இதற்கு வங்கித் தரப்பிலிருந்து, ஓஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் தங்களது பாராட்டுகளையும் கூறி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.