முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் வழுக்கி விழுந்த காங். எம்பி: மருத்துவமனையில் அனுமதி

நாடாளுமன்றத்தில் வழுக்கி கீழே விழுந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கே. சுரேஷ் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
படம்: டிவிட்டர் / கொடிக்குன்னில் சுரேஷ்
பகிர்:

நாடாளுமன்றத்தில் வழுக்கி கீழே விழுந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கே. சுரேஷ் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 23ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கே. சுரேஷ் கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த சுரேஷ் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டு, பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரான கே. சுரேஷ் கேரளத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது

முழு கட்டுரையைப் படிக்க →