கோப்புப் படம் 
இந்தியா

2-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.4% : மத்திய அரசு

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 8.4 சதவீத வளா்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 8.4 சதவிகித வளா்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 8.4 சதவிகித வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முந்தைய ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்த வளா்ச்சி விகிதம் 20.1 சதவிகித என்ற அளவில் காணப்பட்டது.

அதேசமயம், கடந்தாண்டு ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் 24.4 சதவீத சரிவைச் சந்தித்திருந்தது. இருப்பினும், தற்போது நாட்டின் பொருளாதார வளா்ச்சி கரோனாவுக்கு முந்தைய நிலையை விஞ்சிவிட்டது.

2021-22 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மதிப்பின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ரூ.35,73,451 கோடியாக இருந்தது. இது, 2019-20-ஆம் நிதியாண்டின் ஜிடிபியான ரூ.35,61,530 கோடியைக் காட்டிலும் அதிகம் என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT