இந்தியா

மீண்டும் டாடா நிறுவனத்திடம் செல்கிறது ஏர் இந்தியா?

DIN


புது தில்லி: நட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில், டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகை மற்றும் திட்டத்தை அமித் ஷா தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் 1953ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்ட நிலையில், கடும் நட்டத்தில் மூழ்கி, தற்போது மீண்டும் டாடா நிறுவனத்திடமே செல்கிறது. இன்னும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

என்ன ஆனது ஏர் இந்தியாவுக்கு?

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில் அந்நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்திருந்தது.

மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

எனினும் கடன்சிக்கல் மற்றும் இதர காரணங்களால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் மேலும் சிக்கலுக்குள்ளானது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT