இந்தியா

விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றி; ஹரியாணா முதல்வரின் மகிழ்ச்சி தரும் அறிவிப்பு

DIN

நெல் மற்றும் தினை கொள்முதல் நாளை முதல் தொடங்கும் என ஹரியாணா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார் சனிக்கிழமை மதியம் அறிவித்துள்ளார். நெல்லை வாங்காமல் அரசு தாமதப்படுத்திய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கத்தார் வீட்டின் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதித்தினர்.

இதையடுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ள கத்தார், "பருவமழை தாமதத்தால், இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் நெல் மற்றும் தினை கொள்முதல் செய்வதை மத்திய அரசு அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. முன்கூட்டியே தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனவே, கொள்முதல் நாளை தொடங்கும் என தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார், மத்திய இணையமைச்சர் அஸ்வினி செளபே ஆகியோருக்கிடையே சந்திப்பு நடைபெற்றதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல் கொள்முதலை உடனடியாக தொடங்கக் கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கர்னலில் உள்ள கத்தாரின் வீட்டின் முன்பு போராட்டத்தை மேற்கொண்டனர். 

சனிக்கிழமை காலை, அங்கு குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து கோஷங்களை எழுப்பியும் கொடி பிடித்தும் வந்தனர். இரவு முழுவதும் கண் விழித்து இந்த போராட்டத்தை நடத்துவோம் என அவர்கள் எச்சரித்திருந்தனர். 

காவல்துறையினர் அமைத்த தடுப்புகளின் மீது ஏறி நின்றபடி விவசாயிகள் கோபமாக கோஷம் எழுப்புவது போன்ற விடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை கண்காணித்து வந்தனர். 

இதையடுத்து, பாதுகாப்பு குவிக்கப்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை தண்ணீரை பீய்ச்சி அடிப்பதன் மூலம் கலைக்க முயன்றனர். அவர்களில் சிலர் தப்பிக்க தங்களின் வாகனங்களில் ஏற முயன்றனர். இதற்கு மத்தியில், கண்ணீர் புகை குண்டு ஏற்று வந்த வாகனங்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT