முகப்பு
இந்தியா

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு: மத்திய அரசு

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு: மத்திய அரசு
பகிர்:


புது தில்லி:  உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு கடைசி நேரத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதாக மாணவர்கள் புகார் கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தயார் ஆவதற்காக ஜனவரிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  10, 11ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு வளிக்கம் அளித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →