லக்னெள விமான நிலையத்தில் சத்தீஸ்கா் முதல்வா் தர்ணா 
இந்தியா

லக்னெள விமான நிலையத்தில் சத்தீஸ்கா் முதல்வா் தர்ணா

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை பார்க்க அனுமதிக்காததால் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் லக்னெள விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

DIN

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை பார்க்க அனுமதிக்காததால் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் லக்னெள விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை நடந்த இடத்திற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் செல்வதற்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி மறுத்து வருகின்றது. இந்நிலையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற காங்கிரஸின் பிரியங்கா காந்தி ஞாயிற்றுக் கிழமை இரவு விமானத்தில் லக்னௌ சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் லக்கிம்பூர் மாவட்டம் சென்ற அவரை பன்வீர் கிராமத்திதின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், பிரியாங்கா காந்தியை காண லக்னெள வந்த சத்தீஸ்கர் முதல்வரை காவல்துறையினர் அனுமதிக்காததால் விமான நிலையத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் கூறுகையில்,

“சீத்தப்பூரில் உள்ள பிரியங்கா காந்தியை காண லக்னெள வந்துள்ளேன். ஆனால், விமான நிலையத்தைவிட்டு வெளியேற அனுமதி மறுக்கப்படுகிறது.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னலகுடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கடலில் மூழ்கி உயிரிழந்த மூவா் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வா் அறிவிப்பு

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT