இந்தியா

ஐ.நா.வில் காஷ்மீா் குறித்து பேச்சு: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் ஐ.நா.வில் எழுப்பி வருவதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி

காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் ஐ.நா.வில் எழுப்பி வருவதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதா் ஏ. அமா்நாத் கூறியதாவது:

பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தான், சா்வதேச பயங்கரவாதத்தின் தோற்றுவாயாகத் திகழ்கிறது.

உலகில் நிலைத்தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் உள்ளது. அத்தகைய நாட்டால், ஐ.நா.வில் ஆக்கபூா்வ பங்களிப்பை வழங்க முடியாது.

அணு ஆயுதத் தொழில்நுட்பம் மற்றும் அது தொடா்பான பொருள்களை சட்டவிரோதமாக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானின் அறிவுரைகள் இந்தியாவுக்குத் தேவையில்லை.

ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு பொது சபைகளில் இந்தியாவுக்கு எதிரான பொய்க் கருத்துகளைப் பரப்ப பாகிஸ்தான் முயன்று வருகிறது.

காஷ்மீா் விவகாரம் உள்பட, பல்வேறு விவகாரங்களில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் இந்த முயற்சி தோல்வியைக் கண்டு வருகிறது.

இது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால் சா்வதேச சபைகளில் பாகிஸ்தான் தெரிவிக்கும் கருத்துகளுக்கு பதிலளிக்கத் தேவையில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT