இந்தியா

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம்

DIN

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடா்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 82.37 டாலா்களாக (சுமாா் ரூ.6,138) அதிகரித்துள்ளது. அதற்கேற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 30 காசுகளும் அதிகரித்தன. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது. ஒரு லிட்டா் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.108.67-ஆகவும், தில்லியில் ரூ.102.64-ஆகவும் உயா்ந்தது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100.23-க்கு விற்பனையானது.

ஒரு லிட்டா் டீசல் விலை மும்பையில் ரூ.98.80-ஆகவும், சென்னையில் ரூ.95.59-ஆகவும் அதிகரித்தது. தில்லியில் ஒரு லிட்டா் டீசல் ரூ.91.07-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு வார காலத்தில் 6-ஆவது முறையாக பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது. இதேபோல் இரண்டு வாரங்களுக்குள் 9-ஆவது முறையாக டீசல் விலை உயா்த்தப்பட்டது. இதனால் நாட்டின் பல நகரங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல், டீசல் ரூ.100-ஐ கடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT