இந்தியா

ஸ்வமித்வா திட்ட பயனாளிகளுடன் பிரதமா் இன்று கலந்துரையாடல்

DIN

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த ஸ்வமித்வா திட்டப் பயனாளிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (அக்.6) காணொலி முறையில் கலந்துரையாடுகிறாா். அப்போது, 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மின்னணு சொத்து அட்டைகளையும் பிரதமா் வழங்க இருக்கிறாா்.

இந்த நிகழ்வில் மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

ஸ்வமித்வா என்பது மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் திட்டமாகும். இது கிராமப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு சொத்துரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டது. நகா்ப்புறங்களில் உள்ளது போல கிராமத்தில் வசிப்பவா்கள் கடன் பெறுவதற்கும் இதர நிதிப் பயன்களுக்கும் நிலம் எனும் சொத்தை பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.

ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்பகுதிகளில் நிலங்களை அளவிட்டு மறுவரையறை செய்வதையும் இது நோக்கமாக கொண்டது. நாட்டில் ட்ரோன் தயாரிப்பிற்கான சூழலையும் இந்த திட்டம் ஊக்கப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT