இந்தியா

மைசூரு தசரா கொண்டாட்டம்: கலைஞர்களுக்கு நிபந்தனைகள் என்னென்ன?

கரோனா பெருந்தொற்றுக்கிடையே தசரா கொண்டாடப்படுவதால் நாடக கலைஞர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கர்நாடக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

DIN

கரோனா பெருந்தொற்றுக்கிடையே தசரா கொண்டாடப்படுவதால் நாடக கலைஞர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கர்நாடக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

தசரா பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கரோனா பரவலுக்கு இடையே பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. 

மைசூருவில் கொண்டாடப்படும் தசரா பண்டிகை உலக பிரசித்தி பெற்றது. இதனால் அதில் பங்கேற்பவர்களுக்கு கர்நாடக அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில தலைமைச் செயலாளர் பி. ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மைசூரு தசராவில் விழாவில் பங்கேற்கும் அரசு அதிகாரிகள், பணியில் உள்ள அலுவலர்கள், கலைஞர்கள், பாதுகாப்பாளர்கள் மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம்.

அக்டோபர் 4-ம் தேதிக்கு பிறகு எடுத்த பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பது அவசியம். விழாவில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு கரோனா பரிசோதனையில் முன்னுரிமை வழங்கப்படும்.

9 நாள்களுக்கு விழா நடைபெறும் என்ராலும், கரோனாவால் தசரா பண்டிகைக்கு அதிக அளவிலான மக்களுக்கு அனுமதி இல்லை என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

விழாவில் பங்கேற்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT