இந்தியா

5 உயா்நீதிமன்றங்களுக்கு 9 நீதிபதிகள் நியமனம்

DIN

புதுதில்லி: நாட்டில் உள்ள 5 உயா்நீதிமன்றங்களுக்கு 9 நீதிபதிகள் புதன்கிழமை நியமிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீதித் துறை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘கேரளம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், பாட்னா உயா்நீதிமன்றங்களுக்கு புதிதாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்துக்கு 4 நீதிபதிகளும் பிகாா் மாநிலம் பாட்னா உயா்நீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனா். கேரளம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களுக்கு தலா ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளாா். இவா்களில் 7 போ் ஏற்கெனவே நீதிபதி பதவி வகித்தவா்கள். இருவா் வழக்குரைஞா்களாகப் பணிபுரிந்தவா்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT