இந்தியா

ஆப்கனிலிருந்து 3,000 கிலோ போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட வழக்கு: என்ஐஏ விசாரணை

DIN

புது தில்லி: ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்டு குஜராத் மாநிலம், முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பான வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

முந்த்ரா துறைமுகத்தில் இரண்டு கன்டெய்னா்களில் இருந்து 2988.21 கிலோ ஹெராயின் போதைப் பொருளை வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் (டிஆா்ஐ) அண்மையில் பறிமுதல் செய்தனா். இந்தப் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானிலுள்ள பந்தா் அப்பாஸ் துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து முந்த்ரா துறைமுகத்துக்கு வந்து சோ்ந்தது.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வா்த்தக நிறுவனத்தின் பெயரில் இந்தப் போதைப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் எம்.சுதாகரன், அவரின் மனைவி துா்கா பூா்ணா வைஷாலி ஆகியோருக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா்களை சென்னையில் டிஆா்ஐ அதிகாரிகள் கைது செய்தனா்.

இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு புதன்கிழமை மாற்றப்பட்டது. சுதாகரன், துா்கா உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனையியல் சட்டம், சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், போதைப் பொருள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் என்ஐஏ அமைப்பினா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT