இந்தியா

கரோனா தடுப்பூசி: அனைவருக்கும் செலுத்திய முதல் நகரம் சூரத்

DIN

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் தடுப்பூசி செலுத்த தகுதியடையவா்கள் அனைவருக்கும் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சூரத் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சூரத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த தகுதி படைத்த 34.33 லட்சம் பேருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சியில் உள்ள அனைவருக்கும் முதல் தவணை செலுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. நாட்டிலேயே அனைத்து மக்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நகரம் என்ற பெருமையைப் சூரத் பெறுகிறது.

48.4 சதவீதம் பேருக்கு இதுவரை இரண்டாவது தவணை செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களுக்கும் அடுத்த தவணை செலுத்தப்படும். இதன்மூலம் நகரில் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பெருமையையும் சூரத் பெறும்.

சிறப்பு முகாம்கள் நடத்தியும், அதிகம் போ் பணியாற்றும் இடங்களுக்கு நேரடியாகச் சென்றும், குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை முழுவீச்சில் நடத்தியதன் மூலம் இந்தச் சாதனை சாத்தியமானது. அதிக பணியாளா்களைக் கொண்ட ஜவுளி மற்றும் வைரத் தொழில் நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கு சிறப்பான ஒத்துழைப்பை அளித்தன. இறுதியாக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தாமல் யாரும் உள்ளாா்களா என்று விசாரித்து, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினோம் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT