தில்லியில் சிலிண்டர் வெடித்து தாய், 2 குழந்தைகள் பலி
தில்லியில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியாகினர்.
இந்தியாதில்லியில் சிலிண்டர் வெடித்து தாய், 2 குழந்தைகள் பலி
தில்லியில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியாகினர்.
தில்லியில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியாகினர்.
தலைநகர் தில்லியில் ஆனந்த் பர்பத் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 9.05 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறைக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து 2 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தீயை முழுமையாக அணைக்க இரண்டு மணி நேரம் ஆனதாகவும் இரவு 11.15 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகவும் தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதில், காயமடைந்த நிலையில் 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் சுசிலா(35) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த அவரின் மகள்கள் மேஹா(9) மான்சி(7), மகன் மோகன் (7) ஆகிய மூவரும் ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், மான்சி மற்றும் மோகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது மேஹா மட்டும் 40% காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.