இந்தியா

லக்கிம்பூர் சம்பவம்: பஞ்சாப், சத்தீஸ்கர் அரசுகள் உதவித்தொகை அறிவிப்பு

DIN

லக்கிம்பூர் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பஞ்சாப், சத்தீஸ்கர் அரசுகள் சார்பில் தலா ரூ. 50 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர்கள் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் உள்ளிட்டோர் லக்கிம்பூர் சென்றுள்ளனர்.

அப்போது முதல்வர் சரண்ஜீத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“கொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு துணையாக நிற்போம். பஞ்சாப் அரசு சார்பில் இச்சம்பவத்தில் பலியான விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.”

அதேபோல், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷும் ரூ. 50 லட்சம் உதவித்தொகை அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும், இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் பின்னர் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பாஜகவினர் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT