படம்: ட்விட்டர் | ராகுல் காந்தி 
இந்தியா

லக்கிம்பூர்: விவசாயிகள் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல், பிரியங்கா

லக்கிம்பூர் வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி புதன்கிழமை சந்தித்தனர்.

DIN


லக்கிம்பூர் வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி புதன்கிழமை சந்தித்தனர்.

பிரியங்கா காந்தி திங்கள்கிழமை காலை முதல் சீதாபூரிலுள்ள காவல் துறை விருந்தினர் இல்லத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். புதன்கிழமை மாலை தடுப்புக் காவலில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அங்கிருந்து லக்கிம்பூருக்கு ஒன்றாக காரில் புறப்பட்டுச் சென்றனர்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றொரு காரில் அவர்களுடன் சென்றனர். காங்கிரஸ் தலைவர்கள் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் தீபேந்தர் சிங் ஹூடா வேறொரு காரில் பயணித்தனர்.

முதலில் உயிரிழந்த விவசாயி லவ்பிரீத் சிங் வீட்டுக்குச் சென்றனர். அங்கிருந்து ஊடகவியலாளர் ராமன் காஷ்யப் சொந்த ஊருக்குச் சென்றனர். கடைசியாக நச்சதர் சிங் இல்லத்துக்குச் சென்றனர்.  

விவசாயிகளின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என இருவரும் உறுதியளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT