இந்தியா

அக். 14ல் கோவா செல்கிறார் அமித் ஷா!

DIN

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அக்டோபர் 14 ஆம் தேதி கோவா செல்லவிருக்கிறார். 

கோவாவில் தர்பந்தோராவில் புதிய தடயவியல் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக அவர் கோவா வரவிருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சர் தீபக் பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

மேலும், கோவா ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை முன்னிலையில் நடைபெறும் ஒரு விழாவில் உரையாற்ற இருப்பதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்தார். 

அடுத்த ஆண்டு கோவாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவுக்காக கோவா வரும் அமித் ஷா தேர்தல் பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துவார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT