இந்தியா

ஷாருக்கான் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்

DIN

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

3 நாட்கள் காவல் முடிந்த நிலையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஆர்யன் கானை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மும்பை-கோவா சென்ற சொகுசுக்கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அக்டோபர் 2-ஆம் தேதி விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா ஆகியோரை மும்பை போலீஸ் கைது செய்து,  கடந்த 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

அப்போது ஆர்யன்கான் உள்பட 3 பேரை ஒருநாள் காவலில் விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.  மேலும் அக்டோபர் 7-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

நீதிமன்றம் வழங்கிய அவகாசம் முடிந்த நிலையில், ஆர்யன் கான் உள்பட மூவரும் இன்று (அக். 7) மீண்டும் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT