ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன்?: நாளை விசாரணை 
இந்தியா

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன்?: நாளை விசாரணை

போதைப்பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் கோரி ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

DIN

போதைப்பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்யன் கான் உள்பட 7 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை நாளை (அக்.7) நடைபெறுகிறது.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 3 நாள்கள் காவலுக்கு பிறகு ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் அவர்களுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஆர்யன் கான் தரப்பு வழக்குரைஞர் சதிஷ் மனிஷிண்டே ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT