முகப்பு
இந்தியா

உ.பி.யில் டிரக்-பேருந்து நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

உ.பி.யில் டிரக்-பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

உ.பி.யில் டிரக்-பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கியில் இன்று அதிகாலை டிரக்-பேருந்து நேருக்கு நேர் மோதியது. இந்த சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள். 26 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பாரபங்கி விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் பலியானோருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →