இந்தியா

நாட்டில் புதிதாக 22,431 பேருக்கு தொற்று: 318 பேர் பலி

நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 22,842 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 318 பேர் உயிரிழந்துள்ளனர். 

DIN

புதுதில்லி: நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 22,842 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 318 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதே நேரத்தில் 24,602 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 22,431 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,94,312-ஆக உயா்ந்துள்ளது. 

24,602 தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,32,00,258 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,44,198-ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 318 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,49,856-ஆக அதிகரித்துள்ளது.  

நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான கேரளத்திலும் தொடர்ந்து பாதிப்பும், பலியும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,616 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு 134 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 92,63,68,608 கோடியாக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதன்கிழமை மட்டும் 43,09,525 பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 57,86,57,484 பரிசோதனைகளும், புதன்கிழமை மட்டும் 14,31,819 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்! சாம் பித்ரோடா

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் அணு ஆயுத உற்பத்திக்கு பங்களிக்க முடியும்: முதல்வர்!

காந்தாரா சாப்டர் 1 - டிரைலர் அறிவிப்பு!

ஃபிஃபா தரவரிசை: ஸ்பெயின் முதலிடம்..! 28 மாதங்களுக்குப் பின் கீழிறங்கிய ஆர்ஜென்டீனா!

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

SCROLL FOR NEXT