இந்தியா

சுற்றுலா பயணிகளுக்கு அக். 15 முதல் புதிய விசா: புதிய கட்டுப்பாடுகள்

DIN

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் 15-ஆம் தேதி முதல் புதிதாக விசா வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 15 முதல் சுற்றுலா பயணிகள் பிற விமானங்களிலும் இந்தியா வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளுக்கான அனைத்து விசாக்களும் ரத்து செய்யபப்ட்டன.

எனினும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வேறுபல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், வெளிநாடு பயணிகள் இந்தியா வருவதை அனுமதிக்குமாறு பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்தன.

இதனைத் தொடர்ந்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், மத்திய குடும்ப நலத் துறை, சுற்றுலாத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது.

இதில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா வழங்கப்படும் என்றும் வரும் 15-ம் ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT