முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 ஆசிரியர்கள் சுட்டுக்கொலை: காவல்துறையினர் வழக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 2 ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 2 ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் இன்று காலை ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது பள்ளிக்குள் புகுந்த இரண்டு பயங்கரவாதிகள், தலைமை ஆசிரியர் சுக்விந்தர் கவுர் மற்றும் ஆசிரியர் தீபக் ஆகியோரை அறைக்கு வெளியே அழைத்து வந்துள்ளனர். 

அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத விதமாக இருவரையும் துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அந்த இடத்தை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 

மேலும் காயமடைந்த இரண்டு ஆசிரியர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →