இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் சுட்டுக்கொலை: அமித் ஷா நாளை ஆலோசனை

DIN

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் சுட்டுகொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லியில் நாளை (அக். 9) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் லெப்டினெட் ஜெனரல் மனோஜ் சின்ஹா தலைமையிலான குழுவும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ளது.

சமீபகாலமாக எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடக்கும்போது பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்று ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2021-ம் ஆண்டு மட்டும் இதுவரை 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT