இந்தியா

தடுப்பூசி போடாத ஊழியர்கள் அலுவலகம் வர அனுமதி இல்லை: தில்லி அரசு

ANI

கரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்கள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் அலுவலகம் வர அனுமதி இல்லை என தில்லி அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றை தடுக்க தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் அலுவலகம் வர தடுப்பூசியை கட்டாயப்படுத்தி தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி அரசு வெளியிட்ட செய்தியில்,

"அரசு அலுவலகப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அரசு ஊழியர்களும் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் குறைந்தது முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும்.

மேலும், கரோனா தடுப்பூசி செலுத்தப்படாத அரசு ஊழியர்கள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் அலுவலகம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் வரை ஊழியர்களின் வருகைப் பதிவு விடுமுறையாக கருதப்படும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT